சோளம் பயிரிட விவசாயிகள் முன்வாங்க! ேவளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:உணவு தேவையை பூர்த்தி செய்து, சமநிலைப்படுத்த, கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, விவசாயிகள் சோளம் பயிரிட முன்வர வேண்டும் என, வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:சோளம் பயிரிடுவதால், கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவன உற்பத்தி கிடைக்க வழி ஏற்படுகிறது. சோளத்தில் உள்ள பல்வேறு சிறப்பு இயல்புகளின்

பெ.நா.பாளையம்:உணவு தேவையை பூர்த்தி செய்து, சமநிலைப்படுத்த, கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, விவசாயிகள் சோளம் பயிரிட முன்வர வேண்டும் என, வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:

சோளம் பயிரிடுவதால், கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவன உற்பத்தி கிடைக்க வழி ஏற்படுகிறது. சோளத்தில் உள்ள பல்வேறு சிறப்பு இயல்புகளின் அடிப்படையில், விவசாயிகள் சோளத்தை பயிரிட முன்வர வேண்டும். சோளம் கோ, 30 ரகம் தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது. இது, 100 முதல், 105 நாட்கள் வயது வரை உள்ளது.

மானாவாரியில் எக்டருக்கு தானிய விளைச்சல், 2,780 கிலோ மற்றும் உலர் தட்டை விளைச்சல் 6,220 கிலோ வரை தரவல்லது. அதிக செரிமானத்தை கொண்ட தட்டை, வெண்முத்து தானியங்கள், குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்பு தன்மை, மானாவாரி மற்றும் இறவையில் மாநிலம் முழுவதும் சாகுபடி செய்ய ஏற்ற ரகம் என கருதப்படுகிறது.

இதேபோல, சோளம் கே, 12 ரகம், 95 முதல், 100 நாட்கள் வரை வயது உடையது. தென் மாவட்டங்களில் புரட்டாசி பட்டத்தில் மானாவாரி பயிராக எக்டருக்கு, 3,123 கிலோ தானிய விளைச்சல் மற்றும், 11.9 டன் தட்டை விளைச்சல் தரவல்லது. சோளத்தின் தட்டை சன்னமாக இருப்பதால், கால்நடைகள் அதை வீணாக்காமல் உண்ண ஏதுவானது. குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது.

அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டது. மானாவாரி மற்றும் இறவையில் பயிர் செய்ய ஏற்ற ரகம். வறட்சியை தாங்கும் தன்மை கொண்டது. சோளம் கோ, 32 ரகம் தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது. இது, 105 முதல், 110 நாட்கள் வரை வயது உடையது. மானாவாரியில் எக்டருக்கு தானிய விளைச்சலாக, 245 கிலோ மற்றும் உலர் தட்டை விளைச்சலாக, 6,490 கிலோ கொடுக்கவல்லது.

மஞ்சள் கலந்த வெள்ளை நிற தானியங்களை கொண்டது. தானியம் அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும் கொண்டது. அடி சாம்பல் மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டது. மானாவாரி மற்றும் இறவையில் சாகுபடி செய்ய ஏற்ற ரகம். இவ்வாறு, வேளாண் துறையினர் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X