மாம்பாக்கம் சந்திப்பில் நெரிசல் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது. சாலையின் கிழக்கில் கேளம்பாக்கம்; மேற்கில் வண்டலுார்; வடக்கில் மேடவாக்கம்; தெற்கில் காயார் சாலைகள் உள்ளன.நான்கு புறத்தில் இருந்தும் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க, அந்த இடத்தில், போலீசார் இரும்பு தடுப்புகளை
 மாம்பாக்கம் சந்திப்பில் நெரிசல் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது. சாலையின் கிழக்கில் கேளம்பாக்கம்; மேற்கில் வண்டலுார்; வடக்கில் மேடவாக்கம்; தெற்கில் காயார் சாலைகள் உள்ளன.

நான்கு புறத்தில் இருந்தும் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க, அந்த இடத்தில், போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இந்நடவடிக்கையால், கேளம்பாக்கம் மற்றும் காயார் சாலையிலிருந்து மேடவாக்கம் செல்லும் வாகனங்கள், சமத்துவபுரம் குடியிருப்பு அருகே திரும்பி, அதே இடத்திற்கு வந்து, மேடவாக்கம் சாலையில் செல்கின்றன. இப்படி, வாகனங்கள் சுற்றும் தொலைவு, 3 கி.மீ., ஆகிறது.

அதேபோல், மேடவாக்கம் மற்றும் வண்டலுார் சாலையிலிருந்து, காயார் சாலையில் செல்லும் வாகனங்கள், சோணலுார் சந்திப்பு பகுதியில் திரும்பி வந்து செல்வதால், 4 கி.மீ., கூடுதலாக சுற்ற வேண்டியிருக்கிறது.

இதனால், 20 அடியில் கடக்க வேண்டிய சாலையை, 4 கி.மீ., சுற்றி கடப்பதால், கால விரயம் ஏற்படுவதோடு, எரிபொருள் வீணாகிறது.

இந்த சிரமத்தை தவிர்க்க, இரும்பு தடுப்புகளை அகற்றி, சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X