நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் துவக்கம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சித்தாமூர்:சித்தாமூர் அருகே, அமந்தங்கரணை கிராமம் உள்ளது. சுமார், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அமந்தங்கரணை முதல் தாம்பரம் வரை, '81இ' தடம் எண் கொண்ட பேருந்து தினசரி இயக்கப்பட்டது.இதில், அமந்தங்கரணை, போந்துார், தென்னேரிப்பட்டு, களக்காடி, கயப்பாக்கம் ஆகிய கிராம மக்கள், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைகளுக்கு, சித்தாமூர், மதுராந்தகம், செங்கல்பட்டு
 நிறுத்தப்பட்ட அரசு பேருந்து  மீண்டும் துவக்கம்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே, அமந்தங்கரணை கிராமம் உள்ளது. சுமார், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

அமந்தங்கரணை முதல் தாம்பரம் வரை, '81இ' தடம் எண் கொண்ட பேருந்து தினசரி இயக்கப்பட்டது.

இதில், அமந்தங்கரணை, போந்துார், தென்னேரிப்பட்டு, களக்காடி, கயப்பாக்கம் ஆகிய கிராம மக்கள், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைகளுக்கு, சித்தாமூர், மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற வெளியூர்களுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, பேருந்து 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மற்றும் தினசரி வேலைகளுக்கு செல்லும்மக்கள், கடுமையாக அவதிப்பட்டனர்.

பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க, துறை சார்ந்த அதிகாரிகளிடம், பல முறை மனு அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்யூர் வி.சி., -- எம்.எல்.ஏ., பாபு, பேருந்தை இயக்கி, சேவையை மீண்டும் துவக்கி வைத்தார்.

இதில், ஊராட்சி தலைவர் ராஜசேகர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் திலகவதி உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X