செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, கலைத்திருவிழா போட்டிகள் நடக்கின்றன.
ஒவ்வொரு போட்டியிலும், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவி; ஒரு குழு வட்டார அளவிலான போட்டியில், முதல் மற்றும்இரண்டாமிடத்தைப் பிடிப்போர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
வரும் 23ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, பள்ளி அளவிலும், 29ம் தேதி துவங்கி, டிச., 5ம் தேதி வரை, வட்டார அளவிலும், டிச., 6ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை, மாவட்ட அளவிலும், போட்டிகள் நடக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.