அரசு கேபிள் ஒளிபரப்பில் பாதிப்பு நிவர்த்தி செய்ய கலெக்டர் அறிவிப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு 'கேபிள் டிவி' வாயிலாக, 1,000க்கும் மேற்பட்டோர் இணைப்பு பெற்றுள்ளனர். நான்கு நாட்களாக இவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு தெரியவில்லை.இதையடுத்து, கேபிள் ஆபரேட்டர்கள் நேற்று முன்தினம், திருவள்ளூர் அரசு 'கேபிள் டிவி' நிர்வாகத்தில் புகார் மனு கொடுத்தனர்.இந்த நிலையில், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் விடுத்துள்ள

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு 'கேபிள் டிவி' வாயிலாக, 1,000க்கும் மேற்பட்டோர் இணைப்பு பெற்றுள்ளனர். நான்கு நாட்களாக இவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு தெரியவில்லை.

இதையடுத்து, கேபிள் ஆபரேட்டர்கள் நேற்று முன்தினம், திருவள்ளூர் அரசு 'கேபிள் டிவி' நிர்வாகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருள், பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, சில நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப குழு உதவியுடன் 'செட்டாப் பாக்ஸ்கள்' சரி செய்யப்பட்டுள்ளன. கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

எனவே, கேபிள் டிவி ஆப்பரேட்டர் மற்றும் வாடிக்கையாளர்கள், தொழில்நுட்ப உதவி பெற, மாரிமுத்து 94980 17289 என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X