சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

உமாவின் 'சேம்சைடு கோல்!'

Added : நவ 22, 2022 | |
Advertisement
'நமக்கு வேறு யாரும் எதிரி வேண்டாம்; இவர் ஒருவரே போதும்...' என, பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி பற்றி விரக்தியுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மத்திய பிரதேச மாநில நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக ஏற்கனவே பதவி வகித்தவர் தான், உமா பாரதி. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், அமைச்சராகவும்
அக்கம் பக்கம்

'நமக்கு வேறு யாரும் எதிரி வேண்டாம்; இவர் ஒருவரே போதும்...' என, பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி பற்றி விரக்தியுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மத்திய பிரதேச மாநில நிர்வாகிகள்.

இங்கு, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக ஏற்கனவே பதவி வகித்தவர் தான், உமா பாரதி. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், அமைச்சராகவும் இருந்தார்.

உடல் நல பிரச்னையால், கடந்த லோக்சபா தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. தீவிர அரசியலில் இருந்தும், சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்தார். அடுத்தாண்டு மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்த உமா பாரதி, மீண்டும் தலைகாட்டத் துவங்கியுள்ளார்.

'மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்...' என, சில மாதங்களாக பேசி வருகிறார். 'மது விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி, மாநிலம் முழுதும் விரைவில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். யார் நினைத்தாலும் என் பிரசாரத்தை தடுக்க முடியாது...' என்றும் முழங்கி வருகிறார்.

'கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டமும், மது விற்பனைக்கு தடை விதிக்கக் கோருவதும், என் வாழ்நாள் லட்சியம். அதை நிறைவேற்றியே தீருவேன்...' என்றும், சமீபத்தில் அறிவித்தார். ம.பி., மாநில பா.ஜ.,வினரோ, 'தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'சேம்சைடு கோல்' அடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள உமா பாரதியை எப்படி தடுத்து நிறுத்துவது...' என, தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X