மாசுபடுத்தாமல் கடல் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொன்னேரி:உலக மீன்வள தினத்தினை முன்னிட்டு, பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் வளம் பாதிப்பு குறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் ஜெய ஷீலா தலைமையில் நடந்தது.மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் வேலன், விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மீன்வள மேம்பாட்டிற்காக அரசு
 மாசுபடுத்தாமல் கடல் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

பொன்னேரி:உலக மீன்வள தினத்தினை முன்னிட்டு, பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் வளம் பாதிப்பு குறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் ஜெய ஷீலா தலைமையில் நடந்தது.

மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் வேலன், விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மீன்வள மேம்பாட்டிற்காக அரசு செய்துவரும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக்கள், நச்சு வேதிப் பொருட்கள் மற்றும் கடற்பாசிகளால் ஏற்படும் மீன்வள பாதிப்புகள் குறித்து, நீர் சூழலியல் மேலாண்மைத் துறை பேராசிரியர் முனைவர் மணிகண்டவேலு, மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாசுபடுத்தாமல், கடல் வளத்தினை பாதுகாக்க வேண்டும் எனவும் மீனவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

கடல் பயணத்தின்போது, பின்பற்ற வேண்டி கடல்சார் விதிகள் குறித்து, உதவி பேராசிரியர் வேல்முருகன் அறிவுரை வழங்கினார்.

மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் பழங்குடியின மீனவர்கள், 10 பேருக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X