பொன்னேரி:பொன்னேரி பேரூராட்சியில் இருந்து, நகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கமிஷனராக தனலட்சுமி பொறுப்பேற்றிருந்தார்.
அவர் இரண்டு மாதங்களுக்கு முன், பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் நகராட்சி அதிகாரி விஜயலட்சுமி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
பொன்னேரி நகராட்சிக்கு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனராக இருந்த, எஸ்.கோபிநாத் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
நேற்று, கோபிநாத், பொன்னேரி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தலைவர் பரிமளம் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.