பள்ளிக்கு சுற்றுச்சுவர்: கலெக்டர் ஆய்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மூலமத்துாரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, 2021- - 22ம் ஆண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், 6.48 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணி, 10 மாதத்திற்கு முன் துவங்கியது.சுற்றுச்சுவர் கட்டுவதற்கு துாண்கள் அமைத்த நிலையில், தனி நபர் ஆக்கிரமிப்பால் நிறுத்தப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் துவங்காமல்
 பள்ளிக்கு சுற்றுச்சுவர்: கலெக்டர் ஆய்வு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மூலமத்துாரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, 2021- - 22ம் ஆண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், 6.48 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணி, 10 மாதத்திற்கு முன் துவங்கியது.

சுற்றுச்சுவர் கட்டுவதற்கு துாண்கள் அமைத்த நிலையில், தனி நபர் ஆக்கிரமிப்பால் நிறுத்தப்பட்டது.

ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், ஆர்.டி.ஓ., ஹஸ்ரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு, ஒன்றிய பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் நேரில் சென்றனர்.

பின், கலெக்டர், ஆக்கிரமித்ததாக கூறப்படும் தனி நபரை அழைத்து பேசினார். மேலும், ஆர்.டி.ஓ., பி.டி.ஓ., ஆகியோரிடம் சுற்றுச்சுவர் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் இடத்தை உடனே அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், கலெக்டர், ஆர்.டி.ஓ.,வுக்கு அறிவுறுத்தினார்.

அதை தொடர்ந்து, வீரகநல்லுார் ஊராட்சியில் உள்ள பகத்சிங் இருளர் காலனியில், சிறகுகள் அறக்கட்டளை உதவியுடன் இருளர்கள் தயாரித்த செங்கற்களை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து, ஐந்து இருளர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X