சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது. தற்போது, அ.தி.மு.க., இரண்டு, மூன்று கோஷ்டிகளாக பிரிந்து இருப்பதால், இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான்.அ.தி.மு.க.,வுல கூட ரெண்டு, மூணு கோஷ்டிதான் இருக்குது... உங்க கட்சியில கோஷ்டிகள் எண்ணிக்கையை கணக்கிட இரு கை விரல்களும்
பேச்சு, பேட்டி , அறிக்கை

திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது. தற்போது, அ.தி.மு.க., இரண்டு, மூன்று கோஷ்டிகளாக பிரிந்து இருப்பதால், இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான்.

அ.தி.மு.க.,வுல கூட ரெண்டு, மூணு கோஷ்டிதான் இருக்குது... உங்க கட்சியில கோஷ்டிகள் எண்ணிக்கையை கணக்கிட இரு கை விரல்களும் போதாதே!

***

-----

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக, 81 சதவீதமாக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது; இது, வரவேற்கத்தக்க முன்னுதாரணம். அனைத்து சமூகங்களுக்கும், அவர்களது மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான், பா.ம.க., நிலைப்பாடு. தமிழகத்திலும் அந்த அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சமூகவாரியான இடஒதுக்கீட்டை ஏத்துக்கிறவங்க, பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?


பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை, தலா 2,000 வீதம், 6,000 ரூபாய் வழங்கும் திட்டம், 2019ல் மத்திய அரசால் துவங்கப்பட்டது.


அப்போது, இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை, 11.84 கோடி. இந்தாண்டு மே,- ஜூன் மாதங்களில், பயனாளிகளின் எண்ணிக்கை, 3.87 கோடியாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது.

தமிழகத்தில், 48.80 லட்சத்தில் இருந்து, 23.04 லட்சமாக குறைந்துள்ளது. இது பற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி, குறு, சிறு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முறையாக கணக்கெடுப்பு நடத்தி, போலி விவசாயிகள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?

வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி:
சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம், கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் கருவியை, உருவாக்கி உள்ளது. அதை தமிழக அரசு கொள்முதல் செய்து, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

ஆதிதிராவிட மக்களுக்கு மயானம் இல்லை; பாதை இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும். எம்.எல்.ஏ., அலுவலகங்களை போல, எம்.பி.,க்கள் அலுவலகங்களிலும், இ - சேவை மையம் துவக்க வேண்டும். கலெக்டர் அலுவலகங்களில், எம்.பி.,க்களுக்கு அறை ஒதுக்க வேண்டும்.

இதே ஆளுங்கட்சியாக அ.தி.மு.க., இருந்திருந்தால், இந்த பிரச்னைகளுக்காக மாபெரும் போராட்டத்தையே நடத்தியிருப்பீங்கல்ல?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி :
அ.தி.மு.க.,வில், 99 சதவீதம் உறுப்பினர்கள், 75 மாவட்ட செயலர்கள் ஆதரவுடன், பழனிசாமி தலைமையில் கட்சி வீறுகொண்டு எழுந்து நிற்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, தனிக் கட்சி துவங்கிய தினகரன், அ.தி.மு.க., பற்றி பேச உரிமை இல்லை.

கட்சிக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்கள் தான் அதிகம் நடக்குதே தவிர, வீறுகொண்டு எழுந்த மாதிரி தெரியலை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-நவ-202223:10:41 IST Report Abuse
Anantharaman Srinivasan மாப பாண்டியா என்ன ரொம்பநாளா ஆளை காணோம்.??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X