போதைப்பொருள் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:காசிமேடில், போதைப் பொருள் விற்ற, பெண் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வார்ப்பு பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த, பெண் உட்பட மூவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவர்களது பையை சோதனை செய்தனர்.அதில் மெத்தம்பெட்டமைன்,
 போதைப்பொருள் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

சென்னை:காசிமேடில், போதைப் பொருள் விற்ற, பெண் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வார்ப்பு பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த, பெண் உட்பட மூவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவர்களது பையை சோதனை செய்தனர்.

அதில் மெத்தம்பெட்டமைன், எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரைகள் இருந்தன.

விசாரணையில் இவர்கள் காசிமேடு, இந்திரா நகரைச் சேர்ந்த சூர்யா, 20, ராஜேஷ், ௨௩, காசிமேடு, சிங்காரவேலன் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த கீர்த்தனா, 24, என தெரிந்தது.

இவர்களிடம் இருந்து மூன்று கிராம் மெத்தம்பெட்டமைன், 10 எம்.டி.எம்.ஏ., மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், இவர்கள் மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X