இதே நாளில் அன்று

Added : நவ 22, 2022 | |
Advertisement
நவம்பர் 23, 1921 தஞ்சாவூர் மாவட்டம், சிக்கல் எனும் பழையனுாரில், திருவேங்கடம் - செண்பகம் தம்பதிக்கு மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் ராஜகோபாலன்.பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த இவர், சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணம் கற்றார். பாரதிதாசனிடம் உதவியாளராக பணியாற்றியதால், அவரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாக வைத்து, தன் பெயரை ,'சுப்புரத்தின
இதே நாளில் அன்று


நவம்பர் 23, 1921



தஞ்சாவூர் மாவட்டம், சிக்கல் எனும் பழையனுாரில், திருவேங்கடம் - செண்பகம் தம்பதிக்கு மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் ராஜகோபாலன்.

பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த இவர், சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணம் கற்றார். பாரதிதாசனிடம் உதவியாளராக பணியாற்றியதால், அவரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாக வைத்து, தன் பெயரை ,'சுப்புரத்தின தாசன்' என மாற்றினார்; பின், அதைச் சுருக்கி, 'சுரதா' என்றாக்கினார்.

மரபு வடிவிலும், உவமைகளுடனும் கவிதை புனைந்ததால், 'உவமைக் கவிஞர்' என்று அழைக்கப்பட்டார். இவர், மங்கையர்கரசி திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன், 'அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா...' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். 'தலைவன், சிவாஜி' உள்ளிட்ட இதழ்களிலும் பணியாற்றினார்.

'சாவின் முத்தம், காவியம், இலக்கியம், ஊர்வலம், விண்மீன்' உள்ளிட்ட கவிதை இதழ்களையும் நடத்தினார். இவர், உலகக் கவிஞர் பேரவை என்ற அமைப்பை துவங்கி, பல கவியரங்கங்களை நடத்தினார். பாரதிதாசன் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கி வெளியிட்டார். 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2006 ஜூன் 20ல், தன், 85வது வயதில் காலமானார்.

கவியரங்கங்களை கொண்டாட்டமாக்கிய தமிழ் கவிஞரின் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X