கிளை நுாலகத்தில் புத்தக கண்காட்சி

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு, பொன்னேரி கிளை நுாலகத்தின் வாசகர் வட்ட வளர்ச்சி குழு சார்பில், 55வது தேசிய நுாலக வார விழா நடந்தது.வாசகர் வட்ட துணைத் தலைவர் வெல்டன் வாசகர் தலைமையில் நடந்த விழாவில், தலைவர் ஜோதீஸ்வரன், கிளை நுாலக நுாலகர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நுாலகத்தில் புத்தக

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு, பொன்னேரி கிளை நுாலகத்தின் வாசகர் வட்ட வளர்ச்சி குழு சார்பில், 55வது தேசிய நுாலக வார விழா நடந்தது.

வாசகர் வட்ட துணைத் தலைவர் வெல்டன் வாசகர் தலைமையில் நடந்த விழாவில், தலைவர் ஜோதீஸ்வரன், கிளை நுாலக நுாலகர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நுாலகத்தில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தலைமையாசிரியை ரதிக்குமாரி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கிளை நுாலகத்தில், புதிதாக பொருத்தப்பட்டுள்ள, எட்டு 'சிசிடிவி' கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

நிகழ்ச்சியில், கிளை நுாலகத்தில் குடிமையியல் பிரிவில் உள்ள புத்தகங்களை படித்து, அரசு வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளில் தேர்வான எட்டு பேருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X