போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர்.ரயில்வே நிலைய அதிகாரி அபியராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பானுபிரதாப்சிங் ஆகியோர்
 போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார்.

பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர்.

ரயில்வே நிலைய அதிகாரி அபியராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பானுபிரதாப்சிங் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சின்னசேலம் லயன்ஸ் கிளப் தலைவர் சந்தியநாராயணன், செயலாளர் வெள்ளியங்கிரி, பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.

மாணவர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு ரயில் நிலையம், முருகன்கோயில், மூங்கில்பாடி, வழியாக பஸ்நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜா, ேஹமலதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X