சாலையில் கிடந்த பணம் ஆசிரியரிடம் ஒப்படைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சாலையில் கிடந்த ரூபாய் 90 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து ஒப்படைத்த கூலி தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.மழவராயனுார் பகுதியை சேர்ந்தவர் குமார், 45; கூலி தொழிலாளி. இவரது உறவினர் காட்டுநெமிலி வேல்முருகன், 39; இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி வந்து கொண்டு
 சாலையில் கிடந்த பணம் ஆசிரியரிடம் ஒப்படைப்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சாலையில் கிடந்த ரூபாய் 90 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து ஒப்படைத்த கூலி தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.மழவராயனுார் பகுதியை சேர்ந்தவர் குமார், 45; கூலி தொழிலாளி. இவரது உறவினர் காட்டுநெமிலி வேல்முருகன், 39; இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். திம்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தனர்.

அதில் 89 ஆயிரத்து 650 ரூபாய் மற்றும் சான்றுகள் இருந்தது. உடனே இருவரும் அதனை உளுந்துார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலுார் பகுதியை சேர்ந்த ஆசிரியர் செல்வக்குமார், 56, என்பவர் தவறவிட்ட பணம் என தெரியவந்தது.

செல்வக்குமார், கடலுார் மாவட்டம், வேப்பூர் ஹோலிகிராஸ் பள்ளி ஆசிரியர் பள்ளியில் இருந்து பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக பைக்கில் எடுத்து சென்றபோது தவறவிட்டது தெரிந்தது.

அவரை உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, குமார் மற்றும் வேல்முருகன் முன்னிலையில் சப் இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் பணத்தை ஒப்படைத்தார். குமார் மற்றும் வேல்முருகனின் நேர்மையை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X