நிரம்பியது மடிமை கண்டிகை மடுவு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மடிமைகண்டிகை கிராமத்தில், விவசாயிகளுக்கும், கிராமவாசிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்த மடுவு நீரின்றி இருந்தது.சில தினங்களாக பெய்து வரும் மழையால் மடுவுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அது நிரம்பி, உபரி நீர் வஞ்சிவாக்கம், அச்சரப்பள்ளம் ஆகிய ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. மடுவு வில் மழை நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள்
 நிரம்பியது மடிமை கண்டிகை மடுவு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மடிமைகண்டிகை கிராமத்தில், விவசாயிகளுக்கும், கிராமவாசிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்த மடுவு நீரின்றி இருந்தது.

சில தினங்களாக பெய்து வரும் மழையால் மடுவுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது அது நிரம்பி, உபரி நீர் வஞ்சிவாக்கம், அச்சரப்பள்ளம் ஆகிய ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. மடுவு வில் மழை நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே சமயம், அதிலுள்ள ஆகாயத்தாமரைகளால் கிராமவாசிகள் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இது குறித்து கிராமவாசிகள் தெரிவித்ததாவது:

இந்த மடுவு, கவரப்பேட்டை பகுதியில் துவங்கி, காட்டாவூர், உப்பளம், ஏருசிவன், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு கிராமங்கள் வழியாக, பயணிக்கிறது.

மடுவுவில் தேங்கும் தண்ணீரை, குடிப்பதற்கே பயன்படுத்தி வந்தோம். அந்தளவிற்கு சுத்தமாக இருந்தது.

தற்போது ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து கிடப்பதால், அங்கு செல்வதற்கே வழியில்லை. கால்நடைகளும், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆகாயத் தாமரைகளை அகற்றி, ஒவ்வொரு கிராமங்களிலும், படித்துறைகள் அமைத்தால், கிராமவாசிகள் மடுவுவில் தேங்கும் தண்ணீரை பல்வேறு வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்துவர். தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது.

மடுவுவில் தண்ணீர் இல்லாத சமயங்களில், கரைகளை பலப்படுத்தி, ஆழப்படுத்தினால் கூடுதல் தண்ணீரையும் சேமிக்க முடியும். அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X