சுகாதாரமற்ற இடத்தில் இயங்கும் குழந்தைகள் மையம் இடம் மாறுமா?

Added : நவ 22, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம் : எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சுகாதாரமற்ற இடத்தில் இயங்கும் குழந்தைகள் மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் இயங்கி
 சுகாதாரமற்ற இடத்தில் இயங்கும் குழந்தைகள் மையம் இடம் மாறுமா?

கச்சிராயபாளையம் : எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சுகாதாரமற்ற இடத்தில் இயங்கும் குழந்தைகள் மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது.

இம்மையத்தின் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால், இம் மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குழந்தைகள் மையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

குழந்தைகள் மைய கட்டடம் பழைமையானது என்பதால், மேற்கூரைகள் சேதமடைந்து பெயர்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, குழந்தைகளின் நலன் கருதி, சுகாதாரமற்ற இடத்தில் இயங்கும் குழந்தைகள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X