விழிப்புணர்வு வாகன பிரசாரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நவீன வாசெக்டமி இருவார விழாவையொட்டி, விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் வட்டாரம், மலைக்கோட்டாலம் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக நவீன வாசெக்டமி தின இருவார விழா நேற்று துவங்கப்பட்டது. டிச., 4ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் நவீன வாசெக்டமியின்
 விழிப்புணர்வு வாகன பிரசாரம்

கள்ளக்குறிச்சி : மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நவீன வாசெக்டமி இருவார விழாவையொட்டி, விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் வட்டாரம், மலைக்கோட்டாலம் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக நவீன வாசெக்டமி தின இருவார விழா நேற்று துவங்கப்பட்டது. டிச., 4ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் நவீன வாசெக்டமியின் செயல்திட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அனைவருக்கும் விளக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நவீன வாசெக்டமி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் ராஜா, கொடி அசைத்து துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டயுதபாணி, மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சுகாதார நிலைய செவிலியர், மருந்தாளுனர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார புள்ளியியலாளர் சரவணன் செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X