சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : நவ 22, 2022 | |
Advertisement
மப்பேடு:மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மோகன்ராம், 20. இவர், நேற்று முன்தினம், 'டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி' இருசக்கர வாகனத்தில், நணபர் வல்லரசு என்பவருடன், மப்பேடு பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் நின்று கொண்டிருந்த 'அசோக் லைலண்ட்' பால் லாரி திடீரென இடது புறம் திரும்பியதில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது.இதில்,

மப்பேடு:மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மோகன்ராம், 20. இவர், நேற்று முன்தினம், 'டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி' இருசக்கர வாகனத்தில், நணபர் வல்லரசு என்பவருடன், மப்பேடு பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் நின்று கொண்டிருந்த 'அசோக் லைலண்ட்' பால் லாரி திடீரென இடது புறம் திரும்பியதில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் படுகாயமடைந்த மோகன்ராமை, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாலிபர் சடலமாக மீட்பு



மணவாள நகர:ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குஷாமண்டல், 38. இவர், சகோதரர் லபா மண்டல் என்பவருடன் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்த அவர், வீட்டின் அருகில் இறந்து கிடந்துள்ளார்.

மணவாள நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லபா மண்டல் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


மதுபாட்டில்கள் பறிமுதல்



மணவாள நகர்:மணவாள நகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் உள்ள 'குடி'மையத்தில், மணவாள நகர் போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 49 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், அங்கிருந்த விற்பனையாளரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகுமார், 40, என்பவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X