அம்பேத்கர் சிலை அகற்றம்; வி.சி., தர்ணா போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை நள்ளிரவில் போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.திருக்கோவிலுார் அடுத்த விளந்தை பஸ் நிறுத்தம் அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, மணலுார்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சிலையை அகற்றி, திருக்கோவிலுார்
 அம்பேத்கர் சிலை அகற்றம்; வி.சி., தர்ணா போராட்டம்



திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை நள்ளிரவில் போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

திருக்கோவிலுார் அடுத்த விளந்தை பஸ் நிறுத்தம் அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, மணலுார்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சிலையை அகற்றி, திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், வி.சி., மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு, சிலையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி, சிலை நிறுவிய இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் கண்ணன், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், அதிகாரிகள் சிலையை தருவதாக ஒப்புக்கொண்டனர்.

மாவட்ட குழு துணை தலைவர் தங்கம், நிர்வாகிகள் வீரவளவன், வெற்றிவேல், சுப்பிரமணி, நாகேஸ்வர ராவ், தர்மலிங்கம், சிவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X