நிரம்பி வழிந்தும் திறக்கப்படாத தேர்வாய் கண்டிகை ஏரி...திருப்தி!:குடிநீர் பற்றாக்குறையின் போது பயன்படுத்த திட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னையின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையில்,390 கோடி ரூபாய் மதிப்பில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், சென்னைக்கு குடிநீர் தேவை இல்லாததால், இந்த ஏரி தண்ணீரை வாரியம் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள்
நிரம்பி வழிந்தும் திறக்கப்படாத தேர்வாய் கண்டிகை ஏரி...திருப்தி!:குடிநீர் பற்றாக்குறையின் போது பயன்படுத்த திட்டம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையில்,390 கோடி ரூபாய் மதிப்பில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், சென்னைக்கு குடிநீர் தேவை இல்லாததால், இந்த ஏரி தண்ணீரை வாரியம் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

சென்னைக்கு ஒரு மாதத்திற்கு, ௧ டி.எம்.சி., குடிநீர் தேவைப்படுகிறது. விரிவாக்கப் பகுதிகளால், சென்னையின் குடிநீர் தேவை, சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.


ரூ. 390 கோடி திட்டம்



இதை கருத்தில் கொண்டு கூடுதல் நீராதாரங்களை உருவாக்கும் முயற்சி, அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டம் அமைந்தது.

இதற்காக அவர், 390 கோடி ரூபாயை ஒதுக்கீடு, நீர்த்தேக்கப் பணிகளை துவக்கி வைத்தார். அவரது மறைவிற்குப் பின், இதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

நீண்ட இழுபறிக்குப் பின், முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, இத்திட்டத்தை நிறைவு செய்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2020ம் ஆண்டு, நவ., 21ம் தேதி, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இது, ௫௦ கோடி கன அடி கொள்ளளவு உடையது.

தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து, பூண்டி ஏரிக்கு குழாய் அமைத்து நீரை எடுத்துச் சென்று, அங்கிருந்து கால்வாய் வாயிலாக சென்னைக்கு அனுப்பும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.


உபரி நீர் வெளியேற்றம்



ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், ஒரு சொட்டு நீரைக் கூட பூண்டி ஏரிக்கு, சென்னை குடிநீர் வாரியம் அனுப்பவில்லை.

காரணம், சென்னைக்கு தேவையான குடிநீர் தற்போது போதுமான அளவுக்கு உள்ளது. புழல் ஏரியிலும் போதுமான கொள்ளளவு நீர் இருப்பதால், தேர்வாய் கண்டிகை ஏரி நீரை திறந்து விடவில்லை என கூறப்பட்டுள்ளது.

தற்போது தேர்வாய்கண்டிகை ஏரியில், 50 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து, 10 அடியாக உள்ளது. உபரி நீர் வெளியேற்றம் இல்லை.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற அனைத்து குடிநீர் ஏரிகளிலும் போதுமான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

'இதனால் தான், பூண்டி ஏரிக்கு தண்ணீரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வறட்சிக் காலங்களில் மட்டுமே, இந்த ஏரியிலுள்ள நீர், சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்' என்றனர்.

சென்னைக்குத் தேவையான குடிநீர் கிடைக்கிறது. புழல் ஏரியில் போதுமான கொள்ளளவு நீர் இருப்பதால், தேர்வாய் கண்டிகை ஏரி நீரை திறந்து விடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. புழல் ஏரிக்கு வந்த உபரி நீர் மட்டுமே போதுமானது. தேவைப்படும் போது, தேர்வாய் கண்டிகை ஏரி நீர் திறந்து விடப்படும். அனைத்து ஏரிகளும், முழு கண்காணிப்பில் உள்ளன.


- குடிநீர்வாரிய அதிகாரிகள்



- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X