டாஸ்மாக் பார்களில் புதுச்சேரி மதுபாட்டில் விற்றால் நடவடிக்கை: ஏ.எஸ்.பி., எச்சரிக்கை

Added : நவ 22, 2022 | |
Advertisement
திண்டிவனம் : டாஸ்மாக் பார்களில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் வகையில், திடீர் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி., எச்சரித்துள்ளார்.திண்டிவனம் அடுத்த ஆத்துார் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக தவக்களை முரளி, 40; என்பவரை பிரம்மசேதம் போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட

திண்டிவனம் : டாஸ்மாக் பார்களில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் வகையில், திடீர் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி., எச்சரித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த ஆத்துார் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக தவக்களை முரளி, 40; என்பவரை பிரம்மசேதம் போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம், ஏ.எஸ்.பி.,அபிேஷக்குப்தா நேற்று இரவு திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'திண்டிவனம் உட்கோட்டத்தில் கஞ்சா, குட்கா ரெய்டு தொடர்ந்து நடத்தி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். கஞ்சா, குட்கா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியம் காக்கப்படும்.

திண்டிவனம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் புதுச்சேரி மது பாட்டில்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X