விழுப்புரத்தில் நுாலக வார விழா

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் நுாலக வார நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் 55வது தேசிய நுாலக வார விழா நவம்பர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.வாசகர் வட்டத் தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதி வரவேற்றார். கவிஞர் சிவக்குமார், எழுத்தாளர் செங்குட்டுவன், வாசகர் வட்ட
 விழுப்புரத்தில் நுாலக வார விழா

விழுப்புரம் : விழுப்புரத்தில் நுாலக வார நிறைவு விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் 55வது தேசிய நுாலக வார விழா நவம்பர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

வாசகர் வட்டத் தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதி வரவேற்றார். கவிஞர் சிவக்குமார், எழுத்தாளர் செங்குட்டுவன், வாசகர் வட்ட நிர்வாகிகள் சாரதி, பாபு, விக்ரமன், தினகரன், ஹரிதாஸ், பத்மநாபன், அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நுாலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஓய்வு பெற்ற மாவட்ட உரிமையியல் நீதிபதி மகிழேந்தி சிறப்புரையாற்றினார். நுாலகர்கள் காசிம், இளஞ்செழியன், வேல்முருகன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

வாசகர் வட்டத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X