ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், தொழில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியில் கறவை மாடு வளர்த்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்

விழுப்புரம் : இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், தொழில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியில் கறவை மாடு வளர்த்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி 10 நாட்கள் அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர நாளை 24ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

துரித உணவு தயாரித்தல் பயிற்சியில் சேர 25ம் தேதி நேர்காணல் நடைபெறும். இந்த இரு பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு, விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு, அலமேலுபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X