3,083 கால்நடைகளுக்கு சிகிச்சை

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வி.கே.என்.கண்டிகை மற்றும் கார்த்திகேயபுரம் கிராமத்தில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.முகாமை, திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, கால்நடை உதவி மருத்துவர்கள் இளவழகன், ராஜலட்சுமி, கால்நடை ஆய்வாளர்கள் தேவராஜ், லட்சுமி
 3,083 கால்நடைகளுக்கு சிகிச்சை

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வி.கே.என்.கண்டிகை மற்றும் கார்த்திகேயபுரம் கிராமத்தில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

முகாமை, திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, கால்நடை உதவி மருத்துவர்கள் இளவழகன், ராஜலட்சுமி, கால்நடை ஆய்வாளர்கள் தேவராஜ், லட்சுமி பராமரிப்பு உதவியாளர்கள் நாராயணராஜ், அம்மு ஆகியோர் கால்நடை மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை ஆகிய சிகிச்சைகள் அளித்தனர்.

மேலும், கோழிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இரண்டு கிராமங்களில் நடந்த மருத்துவ முகாமில், 296 விவசாயிகளின், 758 பசுக்கள், 1,092 வெள்ளாடுகள், 492 செம்மறி ஆடுகள், 715 கோழிகள், 28 இதர கால்நடைகள் என மொத்தம், 3,083 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தாது உப்புகள் பாக்கெட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X