கல்வெட்டு மற்றும் கோவில் கலைப் பயிலரங்க நிறைவு விழா

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்வெட்டு மற்றும் கோவில் கலைப் பயிலரங்க நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் கல்வெட்டு மற்றும் கோவில் கலை குறித்த 7 நாள் பயிலரங்கம் விழுப்புரம் அறநிலையத் துறை அலுவலகத்தில் நடந்தது. இதில், 6 நாட்கள் தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்.அறநிலையத்துறை அலுவலர்கள்,
 கல்வெட்டு மற்றும் கோவில் கலைப் பயிலரங்க நிறைவு விழா

விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்வெட்டு மற்றும் கோவில் கலைப் பயிலரங்க நிறைவு விழா நடந்தது.

விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் கல்வெட்டு மற்றும் கோவில் கலை குறித்த 7 நாள் பயிலரங்கம் விழுப்புரம் அறநிலையத் துறை அலுவலகத்தில் நடந்தது. இதில், 6 நாட்கள் தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்.

அறநிலையத்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள், மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

களப்பயணமாக விழுப்புரம் அருகே மண்டகப்பட்டு, எசாலம், எண்ணாயிரம், பிரம்மதேசம், திருவாமாத்துார் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வெட்டு மற்றும் கோவில் கலை குறித்து பயிற்றுவித்தனர்.

இதனையடுத்து, விழுப்புரத்தில் நிறைவு விழா நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீன மடாதிபதி, மேல்சித்தாமூர் சமண மட மடாதிபதி, அரசு தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், ஓய்வு பெற்ற கல்லுாரி முதல்வர் சற்குணம் மற்றும் தொழிலதிபர் குபேரன், அறநிலையத்துறை அலுவலர்கள், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தினர் பங்கேற்றனர்.

பயிற்சியில் பங்கேற்ற 75 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய செயலாளர் பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X