பட்டா பெயர் மாற்றத்தைக் கண்டித்து தாலுகா அலுவலகத்தில் தர்ணா

Added : நவ 22, 2022 | |
Advertisement
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட நபரை போலீசார் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் வைத்தியநாதன், 39; தற்போது கோயம்புத்துாரில் வசித்து வருகிறார்.இவரது பரம்பரைச் சொத்து தொடர்பாக இவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு இருந்து

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட நபரை போலீசார் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் வைத்தியநாதன், 39; தற்போது கோயம்புத்துாரில் வசித்து வருகிறார்.

இவரது பரம்பரைச் சொத்து தொடர்பாக இவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலம்பாடியில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தினை வேறு ஒருவருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளதாக நேற்று மதியம் 1:30 மணியளவில் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், தாசில்தார் பாவேந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவரை 2:15 மணியளவில் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X