டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள் பொன்னேரி வழியாக கும்மிடிப்பூண்டி மற்றும் வடமாநிலங்களுக்கு சென்று வருகின்றன.நிலக்கரி, சாம்பல் உள்ளிட்டவைகளை அதிக சுமையுடன் ஏற்றிக் கொண்டு செல்லும் இவை, பொன்னேரி நகரத்திற்குள் செல்லாமல், தடப்பெரும்பாக்கம்,- கிருஷ்ணாபுரம்
 டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள் பொன்னேரி வழியாக கும்மிடிப்பூண்டி மற்றும் வடமாநிலங்களுக்கு சென்று வருகின்றன.

நிலக்கரி, சாம்பல் உள்ளிட்டவைகளை அதிக சுமையுடன் ஏற்றிக் கொண்டு செல்லும் இவை, பொன்னேரி நகரத்திற்குள் செல்லாமல், தடப்பெரும்பாக்கம்,- கிருஷ்ணாபுரம் இடையேயான குறுகிய சாலையில் பயணிக்கின்றன.

இதனால் எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது, தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன.

நேற்று மாலை, மீஞ்சூரில் இருந்து, எம் - சாண்ட் ஏற்றிக் கொண்டு சென்ற பாரத்பென்ஸ் டிப்பர் லாரி ஒன்று, மேற்கண்ட சாலையில் பயணித்தது.

கொடூர் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்காக இடதுபுறம் ஒதுங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.

அங்கிருந்த மின் கம்பம் உடைந்து, மின் ஒயர்களும் அறுந்தன. தகவல் அறிந்த மின் வாரியத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.

டிரைவர் காயமின்றி, லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார். பின், கிரேன், ஜே.சி.பி., இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை நிமித்தினர். இதனால் அந்த சாலையில் பள்ளி வேன்கள் உட்பட பிற வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X