பயணியர் மேற்கூரையை சீரமைக்காததால் அவதி

Added : நவ 22, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரை நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் முனீஸ்வரன் கோவில் அருகே, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.இந்நிலையில், இந்த பயணியர் நிழற்கூரை அருகே அடிக்கடி விசிட் செய்யும் காட்டுயானைகள், பயணியர்
 பயணியர் மேற்கூரையை சீரமைக்காததால் அவதி

வால்பாறை:வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரை நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் முனீஸ்வரன் கோவில் அருகே, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த பயணியர் நிழற்கூரை அருகே அடிக்கடி விசிட் செய்யும் காட்டுயானைகள், பயணியர் நிழற்கூரையின் பின் பகுதியை சேதப்படுத்தின. மேலும், பயணியர் நிழற்கூரையின் மேல்பகுதி இடிந்த நிலையில் உள்ளது. இதனால் நிழற்கூரையை, பயணியர் அச்சத்துடன் பயன்படுத்துகின்றனர்.

எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'சோலையார் எஸ்டேட் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள பயணியர் நிழற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மழை, வெயிலுக்கு நிழற்கூரையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணியரின் சிரமத்தை உணர்ந்து நகராட்சி சார்பில், விரைவில் சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X