8 கி.மீ., 'ரிவர்ஸ்' சென்ற பஸ் டிரைவருக்கு பாராட்டு

Added : நவ 22, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இருந்து, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், ஒற்றை யானை முகாமிட்டு, அந்த வழியாக செல்லும் வாகனங்களை விரட்டி வருகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த, 16ம் தேதி வால்பாறையில் இருந்து சாலக்குடி சென்ற தனியார் பஸ்சில், 40 பயணிகள் பயணம் செய்தனர். அம்பலப்பாறை ரோட்டில்
 8 கி.மீ., 'ரிவர்ஸ்' சென்ற பஸ் டிரைவருக்கு பாராட்டு

வால்பாறை:வால்பாறையில் இருந்து, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், ஒற்றை யானை முகாமிட்டு, அந்த வழியாக செல்லும் வாகனங்களை விரட்டி வருகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த, 16ம் தேதி வால்பாறையில் இருந்து சாலக்குடி சென்ற தனியார் பஸ்சில், 40 பயணிகள் பயணம் செய்தனர். அம்பலப்பாறை ரோட்டில் செல்லும் போது, எதிரே வந்த ஒற்றை யானை பஸ்சை விடாமல் துரத்தியது. பஸ் டிரைவர் அம்புசேட்சன், 8 கி.மீ., துாரத்துக்கு, ஆனைக்காயம் வரை ரிவர்ஸ்சில் பஸ்சை இயக்கி, பயணியரை காப்பாற்றினார்.

மலைப்பாதையில் பஸ்சை லாவகமாக பின்நோக்கி இயக்கி பயணியரை காப்பாற்றிய டிரைவர், நடத்துனரை, வால்பாறை டூரிஸ்ட் கார் ஓட்டுனர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, மாலை, சால்வை அணிவித்து பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X