மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலைக்குழு வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலகம் சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, கலைக்குழு வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
 மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலைக்குழு வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலகம் சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, கலைக்குழு வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தாராபுரம் விழிகள் கிராமிய கலைக்குழுவினர், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, தப்பாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால், துாக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய், உயர் ரத்த அழுத்தம், இருதய வீக்கம் ஏற்படுகிறது. மலட்டுத்தன்மை, கண் பார்வை மங்குதல், கை, கால் வலிப்பு ஏற்படுகிறது. மூளையையும், நரம்பு மண்டலத்தையும் தாக்கி சோர்வடைய செய்கிறது. கல்லீரல் பாதிக்கப்படும்; மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படுத்தும்.

மனிதனை நோயாளியாக்கி, தற்கொலைக்கு துாண்டுகிறது. உறவினர் சுற்றத்தாரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். குடும்பத்துக்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி பிள்ளைகளின் முன்னேற்றத்தை பாதிக்கும்.

மது அருந்தி அல்லது போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதால், விபத்து ஏற்பட்டு மரணத்தில் முடிகிறது. எனவே, கள்ளச்சாராயம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.

கோட்ட கலால் அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலகம் சார்பில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. காந்திசிலை, நகராட்சி அலுவலகம் அருகே, திருவள்ளுவர் திடல், தேர்நிலையம், கோட்டூர் ரோடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெற்றன. மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X