சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

செம்பருத்தி செடி சாகுபடியில் நல்ல வருமானம் உண்டு!

Updated : நவ 23, 2022 | Added : நவ 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் செம்பருத்தியை, விவசாய பயிராக சாகுபடி செய்து வருமானம் பார்க்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த விவசாயி ராமநாதன்: எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். செம்பருத்தி அருமையான பயிர்; தமிழகத்தில் இதை சாகுபடி செய்பவர்கள், நாலைந்து பேர் தான் உள்ளனர்.இது, விவசாயிகளுக்கு அட்சய பாத்திரம். பூவாகவும் விற்கலாம்;
சொல்கிறார்கள்

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் செம்பருத்தியை, விவசாய பயிராக சாகுபடி செய்து வருமானம் பார்க்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த விவசாயி ராமநாதன்: எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். செம்பருத்தி அருமையான பயிர்; தமிழகத்தில் இதை சாகுபடி செய்பவர்கள், நாலைந்து பேர் தான் உள்ளனர்.

இது, விவசாயிகளுக்கு அட்சய பாத்திரம். பூவாகவும் விற்கலாம்; இலையாகவும் விற்கலாம். அதிக தண்ணீரோ, பராமரிப்போ தேவைப்படாத, செலவு குறைந்த விவசாயம்.
இதற்கான தேவை கடல் அளவு இருக்கு; ஆனால், உற்பத்தி உள்ளங்கையளவு கூட இல்லை!

இதை பணம் காய்க்கும் செடியாகவே பார்க்கிறேன். காலையில் நாம் எழும்போதே, செடியில் பணம் தயாராக இருக்கும்; ஒவ்வொரு பூவும் காசு தான். சூரிய உதயத்திலேயே செடி பூத்து நிற்கும்.

தினசரி அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பூவை, மூன்று நாட்கள் நிழலில் காய வைக்க வேண்டும். 6 கிலோ பூக்களை காய வைத்தால், ௧ கிலோ உலர்ந்த பூ கிடைக்கும்.

அதை, கிலோ 480 ரூபாய்க்கும், 5 கிலோ இலையை காய வைத்தால், கிலோ உலர் இலையை, 100 ரூபாய்க்கும் விற்கலாம். செம்பருத்தியில் மதிப்பு கூட்டல் வாயிலாகவும், வருமானம் பார்க்கலாம். பூவையும், இலையையும் தனித்தனியாக பொடியாக்கலாம்.

ஒரு கிலோ காய்ந்த பூவை அரைத்தால், 800 கிராம் பொடி கிடைக்கும். கிலோ செம்பருத்திப் பொடி, 1,000 ரூபாய். செம்பருத்தி இலைப்பொடி கிலோ, 300 ரூபாய்; இதில், குல்கந்து செய்யலாம். பூவின் மகரந்த காம்பு கிலோ, 4,000 ரூபாய்.சித்த வைத்தியத்தில் இதன் தேவை அதிகம்; ஆனால், இதை அதிகம் சேகரித்து விற்பனை செய்ய முடியாது.

இந்த செடிக்கு பெரிதாக நோய் தாக்குதல் இருக்காது; மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கும். அதற்கு, மருந்து தெளித்தால் போதும்; கட்டுப்படுத்தி விடலாம். ரசாயன உரம் எதுவும் இட தேவைஇல்லை.

இதை ஒருமுறை நடவு செய்தால், 15 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். முற்றிய செடியில் இருந்து சிம்பு வெட்டி, நாத்து தயார் செய்யலாம்.ஒரு ஏக்கரில், ஆண்டுக்கு ஒரு லட்சம் நாற்று தயார் செய்யலாம்; அதன் மதிப்பு, 6 லட்சம் ரூபாய். இப்படி தயார் செய்த நாற்றுகளை பெரிய பெரிய நர்சரிகளில் இருந்து வாங்கிச் செல்வர்.என்னைப் பொறுத்தவரை செம்பருத்தி செல்வம் கொடுக்கும் பயிர்.செம்பருத்தியை தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது, ஏக்கருக்கு ஆண்டுக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasuki Kumar - Salem,இந்தியா
25-நவ-202211:12:29 IST Report Abuse
Vasuki Kumar Kindly share his contact details So that it will be helpful for upcoming young entrepreneurs like us....
Rate this:
Cancel
krishnamurthi - CHENNAI,இந்தியா
24-நவ-202210:28:38 IST Report Abuse
krishnamurthi Need Mobile number. Kindly provide to start
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
23-நவ-202209:06:03 IST Report Abuse
Dharmavaan இவர் தொலை பேச எண் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X