விவசாய மின் இணைப்பு; விழுப்புரத்தில் முகாம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விவசாய மின் இணைப்பு பெறுவது, விண்ணப்ப பெயர் மாற்றம் உள்ளிட்டவை குறித்த சிறப்பு முகாம், விழுப்புரத்தில் நாளை 24ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய மின் இணைப்பு பெறுவது. விண்ணப்பங்கள் பெயர் மாற்றம் மேற்கொள்வது மற்றும் சர்வே எண் மாற்றம் மேற்கொள்வது ஆகிய கோரிக்கைகள் குறித்த சிறப்பு முகாம்நாளை24ம் தேதி நடக்கிறது.விழுப்புரம்

விழுப்புரம் : விவசாய மின் இணைப்பு பெறுவது, விண்ணப்ப பெயர் மாற்றம் உள்ளிட்டவை குறித்த சிறப்பு முகாம், விழுப்புரத்தில் நாளை 24ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய மின் இணைப்பு பெறுவது. விண்ணப்பங்கள் பெயர் மாற்றம் மேற்கொள்வது மற்றும் சர்வே எண் மாற்றம் மேற்கொள்வது ஆகிய கோரிக்கைகள் குறித்த சிறப்பு முகாம்நாளை24ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (விநியோகம்) அலுவலகத்தில் நடைபெறும் முகாமில், விவசாய மின்இணைப்பு கேட்டு, கடந்த2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2013 மார்ச் 31ம் தேதி வரையிலும்,சுயநிதி திட்டத்தின்படி, கடந்த2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரையிலும், 25 ஆயிரம் மற்றும் 50 ரூபாய் செலுத்தி பதிவு செய்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெயர் மாற்றத்திற்கு, இறப்பு சான்று, வாரிசு சான்று, கூட்டு பட்டாதாரர்களின் ஆட்சேபணை இல்லா கடிதம் அல்லது பிணையுறுதி பத்திரம், வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இத்தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (விநியோகம்) சைமன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X