அரசு சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும், 27ம் தேதி, பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் முகாமில், 250க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.வேலை பெற விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஆதார் அட்டை, கல்விச் சான்றுகள், பயோ டேட்டா

பொள்ளாச்சி;கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும், 27ம் தேதி, பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் முகாமில், 250க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

வேலை பெற விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஆதார் அட்டை, கல்விச் சான்றுகள், பயோ டேட்டா ஆகியவற்றுடன் வர வேண்டும். முகாமில், 8ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பொறியியல் கல்வி, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., பயின்றவர்கள் பங்கேற்கலாம்.

நேர்முக தேர்வுக்கு வரும் முன், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்ய வேண்டும்.

இம்முகாம் வாயிலாக, 15,000க்கும் மேற்பட்ட பணிகள் வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் வாயிலாக, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, போட்டித் தேர்வு பயிற்சிக்கான பதிவு செய்யப்படும், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு, 97901 99681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X