வேலை உறுதி திட்டத்தில் சமூக தணிக்கை தீவிரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஊராட்சிகளில் சமூக தணிக்கை பணி மும்முரமாக நடக்கிறது.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், சமூக தணிக்கை பணி தீவிரமாக நடக்கிறது. இந்த தணிக்கையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இதில், திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டதா,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஊராட்சிகளில் சமூக தணிக்கை பணி மும்முரமாக நடக்கிறது.

பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், சமூக தணிக்கை பணி தீவிரமாக நடக்கிறது. இந்த தணிக்கையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதில், திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டதா, எத்தனை பயனாளிகள் பணியில் ஈடுபட்டனர், அவர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்பட்டதா, பணியின் வாயிலாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

தணிக்கை முடிந்த பின், வரும் ஜனவரி மாதம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, தணிக்கையின் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அனுமதி பெற்ற பின் அரசுக்கு அனுப்பப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X