கூட்டுறவு துறைகளை முன்னேற்ற முதல்வருக்கு ஒத்துழைப்பு தர தயார் எதிர்க்கட்சி தலைவர் சிவா உறுதி

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : கூட்டுறவு, அரசு துறைகளை முன்னேற்ற முதல்வர் நினைப்பது உறுதியாக இருந்தால், அதற்கு தி.மு.க., முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் நலிவடைய ஊழியர்களே காரணம் என முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு அவர்கள்மட்டும் காரணமில்லை. அந்த

புதுச்சேரி : கூட்டுறவு, அரசு துறைகளை முன்னேற்ற முதல்வர் நினைப்பது உறுதியாக இருந்தால், அதற்கு தி.மு.க., முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் நலிவடைய ஊழியர்களே காரணம் என முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு அவர்கள்மட்டும் காரணமில்லை. அந்த நிறுவனங்கள் நலிவடைய யார், யாருக்கு பெரும்பான்மை பங்குள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

அளவுக்கு மீறிய ஊழியர்கள் நியமித்தல், அரசுக்கு தேவையான பொருட்களை இங்கிருந்து கொள்முதல் செய்து அதற்கான பணம் வழங்காமல் இருப்பது, வாரிய தலைவர்கள் நியமித்து நிறுவன சொத்துக்கள் சூறை, வரவு செலவுகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யாதது ஆகியவையே காரணமாகும்.

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் நடந்த முறைகேடு வெளியே தெரியாமலிருக்க அந்த மில்லை திறக்காமல் உள்ளனர். இதற்கு பிறகாவது அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாண்லே நிறுவனங்களின் வரவு செலவுகளை உடனே தணிக்கை செய்ய வேண்டும்.

கூட்டுறவு மற்றும் அரசு துறைகளை முன்னேற்ற முதல்வர் நினைப்பது உண்மையாக இருந்தால், அதற்கு முழு ஒத்துழைப்பு தர தி.மு.க., தயாராக உள்ளது.

சீரழிந்துள்ள கூட்டுறவு, அரசு நிறுவன பட்டியலை தயார் செய்து, அதில் மேம்படுத்த வாய்ப்புள்ள நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், அந்த அளவுக்கு அதிகமான ஊழியர்களை உரிய நிவாரணம் வழங்கி நீக்க வேண்டும்.

அதன்பிறகு, தேவையான நிதி ஒதுக்கி, தொழில்நுட்பம், வியாபார நுணுக்கம் தெரிந்தோரை நியமித்து இயக்க வேண்டும்.

இதில், அரசியல் குறுக்கீடு ஏதுமின்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சிறப்பாக செயல்படும் மாகி பிராந்திய கூட்டுறவு நிறுவனங்கள் ஆய்வு செய்து, அதே போல், புதுச்சேரி பிராந்தியத்திலும் கூட்டுறவு நிறுவனங்களை செயல்பட செய்து லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X