மழை பொழிவு குறைந்தாலும் ததும்பும் சோலையாறு அணை

Added : நவ 22, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறையில், வடகிழக்கு பருவமழை ஓய்வெடுக்கும் நிலையில், சோலையாறு அணை நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த ஜூலை மாதம், 10ம் தேதி நிரம்பியது. தொடர் மழையால், காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளும்
 மழை பொழிவு குறைந்தாலும் ததும்பும் சோலையாறு அணை

வால்பாறை:வால்பாறையில், வடகிழக்கு பருவமழை ஓய்வெடுக்கும் நிலையில், சோலையாறு அணை நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த ஜூலை மாதம், 10ம் தேதி நிரம்பியது. தொடர் மழையால், காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளும் நிரம்பின.

இந்நிலையில், கடந்த மாதம், 29ம் தேதி முதல் வால்பாறையில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. சோலையாறு அணை தொடர்ந்து நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழைப்பொழிவு குறைந்து, கடும் பனிப்பொழிவு நிலவும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.41 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 159 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X