ஜிப்மர் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க., வலியுறுத்தல் | Dinamalar

ஜிப்மர் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க., வலியுறுத்தல்

Added : நவ 22, 2022 | |
புதுச்சேரி : ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 25.6 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்த மனு:ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ படிப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு



புதுச்சேரி : ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 25.6 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்த மனு:

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ படிப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோன்று, வேலை வாய்ப்பிலும் 26.5 இட ஒதுக்கீடு என்பது நம் மாநில உரிமையாகும். எனவே உடன் புதுச்சேரி அமைச்சரவையை கூட்டி. ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரிக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதை தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் டில்லி சென்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வழங்கி, இட ஒதுக்கீடு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஜிப்மரில் நடக்கும் செவிலியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரிடம் மனு கொடுத்தபோது, கட்சியின் பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் அன்பழகன், ஜெ.,பேரவை மேற்கு மாநில செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X