கொத்தனார் கொலை வழக்கு; தலைமறைவான இருவர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை நெட்டி தள்ளி கொலை செய்துவிட்டு, தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி தருமாபுரி, வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் முருகபெருமாள் மகன் மாறன்,57; கொத்தனார். இவர் கடந்த 20ம் தேதி சொத்து பிரச்னை காரணமாக சமாதானம் பேச, தனது சகோதரி வீட்டிற்கு சென்றார்.ஆனால் அவர், மாறனை வீட்டிற்கு வரவிடாமல் திட்டி அனுப்பினார். அதில்
 கொத்தனார் கொலை வழக்கு; தலைமறைவான இருவர் கைது

புதுச்சேரி : மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை நெட்டி தள்ளி கொலை செய்துவிட்டு, தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி தருமாபுரி, வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் முருகபெருமாள் மகன் மாறன்,57; கொத்தனார்.

இவர் கடந்த 20ம் தேதி சொத்து பிரச்னை காரணமாக சமாதானம் பேச, தனது சகோதரி வீட்டிற்கு சென்றார்.

ஆனால் அவர், மாறனை வீட்டிற்கு வரவிடாமல் திட்டி அனுப்பினார்.

அதில் மனமுடைந்த மாறன், அன்று இரவு நண்பர்கள் இருவருடன் மதுக்கடைக்கு சென்று குடித்தார் அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த இருவரும், மாறனை நெட்டித்தள்ளினர். அதில், தலையில் படுகாயமடைந்த மாறன் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடன் இருவரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து மாறன் மகள் மதனி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.

அதில், கிடைத்த தகவலின் பேரில், குருமாம்பேட் தனியார் தொழிற்சாலை குடோனில் பதுங்கியிருந்த தர்மாபுரியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சிவக்குமார்,48; வில்லியனுார், பாண்டியன் நகர், மஞ்சினி மகன் குணசேகரன்,49; ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அதில், மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் நெட்டி தள்ளியதில், மாறன் தலையில் அடிப்பட்டு இறந்தது தெரிய வந்தது.

அதன்பேரில் பிடிபட்ட இருவரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X