பைக் மோதி முதியவர் பலி

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர், பைக் மோதி இறந்தார்.புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் தருமாபுரி அருகே கடந்த 20ம் தேதி இரவு, 63 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருக்கனுார் நோக்கி சென்ற பைக் மோதியது. அதில், படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக்

புதுச்சேரி : சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர், பைக் மோதி இறந்தார்.

புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் தருமாபுரி அருகே கடந்த 20ம் தேதி இரவு, 63 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருக்கனுார் நோக்கி சென்ற பைக் மோதியது. அதில், படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். அதில், இறந்தவர் சஜித்,63; என்பதும் பேக்கரியில் வேலை செய்து வந்தது மட்டும் தெரிய வந்தது. அவர் எந்த பேக்கரியில் வேலை செய்தார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் , தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X