அரசு திட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை ஆளுங்கட்சி தலையீடு!சப்-கலெக்டர் நடத்திய கூட்டத்தில் அத்துமீறல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:அரசு நிர்வாகத்தில், தி.மு.க.,வினரின் தலையீடால் அரசின் திட்டத்தை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால், திட்டப்பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.முதல்வர் ஸ்டாலின், 'இது விடியல் ஆட்சி, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சிப்பாதையில்தமிழகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்,' என மக்களை சந்திக்கும் போதும்,

பொள்ளாச்சி:அரசு நிர்வாகத்தில், தி.மு.க.,வினரின் தலையீடால் அரசின் திட்டத்தை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால், திட்டப்பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், 'இது விடியல் ஆட்சி, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சிப்பாதையில்தமிழகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்,' என மக்களை சந்திக்கும் போதும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் தெரிவிக்கிறார்.

ஆனால், தி.மு.க.,வினரின் தலையீடால் திட்டங்கள் முடங்கி போவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. பொள்ளாச்சி அருகே, தற்போது இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் தலையிட்டு, திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வேண்டும் என, குரல் எழுப்பி வருவதால், இத்திட்டம் முடங்கும் சூழல் உள்ளது.

ஆழியாறு பகுதியில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் வீதம், 317 வீடுகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பணிகள் துவங்க ஆயத்தப்பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்காக, ஆழியாறு மனமகிழ் மன்ற கட்டடத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதியில் வசிப்போர் சிலர், எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சப் - கலெக்டர் அலுவலகத்தில், இப்பிரச்னை சம்பந்தமாக நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், அப்பகுதி மக்கள், அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுமக்கள் பேசுகையில், 'கோவில் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மன மகிழ் மன்ற இடத்தில் தான் நடத்துகிறோம். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டாம் என கூறவில்லை. போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள இடத்தை மாற்று இடமாக ஆய்வு செய்யலாம். இதற்கு நான்கு நாட்கள் நேரம் கொடுக்க வேண்டும்,' என்றனர்.

சப் - கலெக்டர் பிரியங்கா பேசுகையில், 'அரசு அறிவித்த திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மனமகிழ் மன்ற பகுதியில் பணிகளை துவங்க தேர்வு செய்யப்பட்டது. முழுமையான ஆய்வு செய்த பிறகே, அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணை அருகில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது. அரசு அறிவித்த திட்டம், அரசு இடத்தில் செயல்படுத்த முடியும்.

இதற்கு மேல் நேரம் கொடுக்க வேண்டிய விஷயமும் இல்லை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன், 'மேடம்... நீங்க திட்டத்தை அதே இடத்தில் தான் செயல்படுத்த வேண்டுமா, நாங்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையீட்டுக்கொள்கிறோம்,' என தெரிவித்து, கூட்டத்தை பாதியிலேயே முடித்து, வந்தவர்களையும் கலைத்து அழைத்துச் சென்றார்.


இது நியாயமா?



ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சப் - கலெக்டர் தலைமையில், முதல்வர் அறிவித்த திட்டத்தை செயல்படுத்த மக்களிடம் பேச்சு நடத்தும் வகையில் கூட்டம் நடந்தது.

அதில், மக்களை சமரசப்படுத்தி அங்கு குடியிருப்பு கட்ட, சப் - கலெக்டர் பேசிய போது, தி.மு.க., மாவட்ட செயலாளரே, சப் - கலெக்டர் நடத்திய கூட்டத்தை பாதியிலேயே முடித்து பொதுமக்களை அழைத்துச் சென்றது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது.

மேலும், ஆளுங்கட்சியினரே முட்டுக்கட்டை போட்டால், அரசு திட்டங்களை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது; மக்களுக்கான திட்டம் முழுமையாக மக்களிடம் சென்றடைகிறதா என முதல்வர் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது, என, ஆளுங்கட்சியினர் மீதான அதிருப்தியை அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X