புதிதாக யாரேனும் வந்தால் சொல்லுங்க! பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
வால்பாறை:புதியதாக யாரேனும் செட்டில்மென்ட் பகுதிக்கு வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என, பழங்குடியின மக்களுக்கு வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வால்பாறை தாலுகாவில் உள்ள, 12 செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் கடை வாயிலாகவும், நடமாடும் ரேஷன் கடை வாயிலாகவும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், தமிழக
 புதிதாக யாரேனும் வந்தால் சொல்லுங்க! பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு

வால்பாறை:புதியதாக யாரேனும் செட்டில்மென்ட் பகுதிக்கு வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என, பழங்குடியின மக்களுக்கு வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வால்பாறை தாலுகாவில் உள்ள, 12 செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் கடை வாயிலாகவும், நடமாடும் ரேஷன் கடை வாயிலாகவும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதிக்கு, மாவோயிஸ்ட்கள் வந்து செல்ல வாய்ப்புள்ளது. அதனால், போலீசார் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து அடிக்கடி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை, ேஷக்கல்முடி, பாலகணாறு செட்டில்மென்ட் பகுதியில், வட்ட வழங்கல் அலுவலர்சுந்தர்ராஜ், வருவாய்ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று, பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தினர்.

அதிகாரிகள் பேசும்போது, 'ரேஷன் பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதிகாரிகளிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

புதிய ரேஷன் கார்டு தேவைப்படுபவர்கள் தாலுகா அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கலாம்.

மாவோயிஸ்ட்கள் யாரேனும் ரேஷன் பொருட்கள் கேட்டால் வழங்க கூடாது. புதியதாக யாரேனும் செட்டில்மென்ட் பகுதிக்கு வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்,' என்றனர்.

தேர்தல் தனி தாசில்தார் மோகன்பாபுபேசுகையில், ''வால்பாறையில், வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் சிறப்பு முகாமில், வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பம் வழங்கப்படுகிறது. புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X