காரைக்கால் மீனவர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு கவர்னர் நன்றி

Added : நவ 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்த மத்திய அரசுக்கு கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:இலங்கை கடற்படையால் கைது செயயப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள், உலக மீனவர் தினமான நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது.கைது செய்த மீனவர்களை

புதுச்சேரி : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்த மத்திய அரசுக்கு கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

இலங்கை கடற்படையால் கைது செயயப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள், உலக மீனவர் தினமான நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது.

கைது செய்த மீனவர்களை மீட்டு தரக்கோரி அவர்களது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

அதனையேற்று மீனவர்களின் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்த மத்திய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் மீனவர்கள் சார்பிலும், புதுச்சேரி மக்கள் சார்பிலும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X