கொண்டைக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பத்தை கையாளுங்க!

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி: பனிக்கடலை எனப்படும் கொண்டைக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில், பனிக்கடலை எனப்படும் கொண்டைக்கடலை தற்போதைய பருவத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார், 400 ெஹக்டேர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கொண்டைக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து, தெற்கு வட்டார வேளாண்

பொள்ளாச்சி: பனிக்கடலை எனப்படும் கொண்டைக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில், பனிக்கடலை எனப்படும் கொண்டைக்கடலை தற்போதைய பருவத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார், 400 ெஹக்டேர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கொண்டைக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து, தெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் கூறியதாவது:

ஒரு ெஹக்டேருக்கு. 75 முதல், 100 கிலோ விதை தேவைப்படும். விதைக்கும் முன், விதைகளை டிரைகோடெர்மா விரிடி எனும் நன்மை செய்யும் பூஞ்சாணம் கொண்டு, விதை நேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். இதனால், பயிர் வளரும் போது, வாடல் மற்றும் வேர் அழுகல் நோயைதவிர்க்கலாம்.

மானாவாரி சாகுபடியில், ெஹக்டேருக்கு, 12.5 கிலோ நைட்ரஜன், 25 கிலோ பாஸ்பரஸ், 12 கிலோ பொட்டாஷ் அடி உரமாக இட வேண்டும். விதைப்பின் போது, ஒவ்வொரு வரிசைக்கும், 30 செ.மீ., இடைவெளியும், செடிக்கு செடி, 10 செ.மீ., இடைவெளியும் இருந்தால், மகசூல் சிறப்பாக இருக்கும்.

வேளாண் துறையின் ஆலோசனை பெற்று, உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் காய்ப்புழுக்கள் கட்டுப்பாட்டு வழிமுறைகள் ஆகியவற்றை தெரிந்து பின்பற்றலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X