பள்ளிகளில் 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்ச்சி

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை பள்ளிகளில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நோக்கில் 'இணைவோம் மகிழ்வோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும் நோக்கில் 'இணைவோம் மகிழ்வோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து,
 பள்ளிகளில் 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்ச்சி

உடுமலை:உடுமலை பள்ளிகளில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நோக்கில் 'இணைவோம் மகிழ்வோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும் நோக்கில் 'இணைவோம் மகிழ்வோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, உடுமலை பகுதிகளிலுள்ள பள்ளிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி, காகிதப்பறவை என்ற தலைப்பில் இரண்டு பள்ளிகளில் கலை நிகழ்வு நடத்தப்பட்டது.

* உடுமலை - பொள்ளாச்சி ரோட்டிலுள்ள எஸ்.கே.பி., பள்ளியில் 'இணைவோம், மகிழ்வோம்' நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன் கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து, மாணவர்களிடம் விளக்கப்பட்டது.

மாணவ, மாணவியர் உறுதிமொழியும் ஏற்றனர். உடற்கல்வி இயக்குனர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'இணைவோம் மகிழ்வோம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பலுான் பறக்க விடுதல், சோப்புக்குமிழி உருவாக்குதல், பூங்கொத்து உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர் சாவித்ரி, ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் என, தெரிவித்தனர்.

இதே போல், உடுமலை பகுதியிலுள்ள மற்ற பள்ளிகளிலும், இந்நிகழ்ச்சி நடத்த கல்வித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X