பள்ளி வாகனங்களில் கேமரா சென்சார் கருவி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின், வாகனங்களில் இரண்டு கேமராக்கள் மற்றும், 'சென்சார்' கருவி பொருத்தும் அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில், மொத்தம், 62 தனியார் பள்ளிகளில், 345 பள்ளி வாகனங்கள்
 பள்ளி வாகனங்களில் கேமரா சென்சார் கருவி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின், வாகனங்களில் இரண்டு கேமராக்கள் மற்றும், 'சென்சார்' கருவி பொருத்தும் அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில், மொத்தம், 62 தனியார் பள்ளிகளில், 345 பள்ளி வாகனங்கள் உள்ளன.

இந்த வாகனங்களின் பாதுகாப்பு, தரம் குறித்து, ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில், விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் பள்ளி வாகனங்களில், இரண்டு கேமராக்கள் மற்றும் சென்சார் கருவி பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில், இரண்டு கேமராக்கள் மற்றும் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:

தனியார் பள்ளி வாகன டிரைவர்களின் கவனக்குறைவு மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்கள் உயரமாக இருப்பதால், குழந்தைகள் வாகனத்தை கடந்து செல்வது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.

இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, முன் பக்கம் மற்றும் பின் பக்கம், என, இரண்டு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன், 'டிஸ்பிளே' டிரைவர் இருக்கை அருகே பொருத்தப்படும்.

அதன் வழியாக வாகனத்தை இயக்கும் டிரைவர், முன் பக்கம், பின்பக்கம் வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என கவனித்து, 'ரிவர்ஸ்' எடுக்கலாம்.

மேலும், வாகனங்களின் முன், பின் பக்கம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால், வாகனத்தை யாராவது கடக்க முயன்றால், ஒலி ஒலிப்பதை கவனித்து அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.

இந்த சென்சார் கருவிகள், கேமரா, வாகனத்தில் மூன்று அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 'மெமரி கார்டு' வாயிலாக பதிவுகள் பதியப்படுகிறது.

அரசின் உத்தரவு செயல்படுத்த தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 100 தனியார் பள்ளி பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளன.

பத்து நாட்களுக்குள் கேமரா மற்றும் சென்சார் கருவி பொருத்தாவிட்டால், சோதனை அறிக்கை வழங்கப்படும். அதன் பின், தகுதிச்சான்று ரத்து செய்யப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X