ரோடு போடுங்க; பாலம் கட்டுங்க! தொகுதிக்காக கலெக்டரிடம் மனு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,' என வலியுறுத்தி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மாவட்ட கலெக்டர் சமீரனிடம், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, ராசிசெட்டிபாளையம் ஊராட்சி இந்திரா எம்.ஜி.ஆர்., நகர், அகத்துார் அம்மன் கோவில் முதல் ஓரக்கலியூர்
 ரோடு போடுங்க; பாலம் கட்டுங்க! தொகுதிக்காக கலெக்டரிடம் மனு

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,' என வலியுறுத்தி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மாவட்ட கலெக்டர் சமீரனிடம், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி, ராசிசெட்டிபாளையம் ஊராட்சி இந்திரா எம்.ஜி.ஆர்., நகர், அகத்துார் அம்மன் கோவில் முதல் ஓரக்கலியூர் பிள்ளையார் அப்புச்சி கோவில் வரையும், ஓரக்கலியூர், முள்ளுப்பாடி மாகாளியம்மன் கோவில் முதல் காளியண்ணன்புதுார் செல்லும் ரோடு தார் சாலையாக அமைக்க வேண்டும்.

வடசித்துார் வண்ணாந்துறை தோட்டம் அருகே மேல் மட்ட பாலம் அல்லது தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும். காட்டம்பட்டி ஊராட்சி தாசநாயக்கன்பாளையம் விநாயகர் கோவில், மயானக்கரை முதல் மெட்டுவாவி சாலை வரை தார் சாலை அமைக்க வேண்டும்.

வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் வெள்ளேகவுண்டன்பாளையம்புதுார் கிராமம் வரை தார் சாலையும், எஸ்.குமாரபாளையம் செல்லும் ரோட்டின் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலமும் அமைக்க வேண்டும்.

பொள்ளாச்சி நகராட்சி, 35வது வார்டில் உள்ள ரேஷன் கடை பழுதடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இதில், 35 மற்றும், 36வது வார்டுகளை சேர்ந்த, 1,300 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுகின்றனர். எனவே, 100 அடி ரோட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் பல்நோக்கு மைய கட்டடம் கட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, பல்நோக்கு மைய கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே கட்ட வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X