போலீஸ் செய்திகள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
செல்போன் திருடியவர்கள் கைதுகிணத்துக்கடவு அருகே, சொக்கனுார் சென்ட்ரல் பேங்க் வீதியை சேர்ந்த காளிமுத்துவின் மகள் நர்மதா,20, தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் கோவைக்கு வேலைக்கு சென்று டவுன் பஸ்சில் கண்ணமநாயக்கனுார் வந்து, சொக்கனுாரில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்றார்.அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த


செல்போன் திருடியவர்கள் கைது



கிணத்துக்கடவு அருகே, சொக்கனுார் சென்ட்ரல் பேங்க் வீதியை சேர்ந்த காளிமுத்துவின் மகள் நர்மதா,20, தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் கோவைக்கு வேலைக்கு சென்று டவுன் பஸ்சில் கண்ணமநாயக்கனுார் வந்து, சொக்கனுாரில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், நர்மதா தலையை தட்டி விட்டு, அவரிடம் இருந்த, மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபைல் பறித்துச் சென்ற ஆதியூர் மதுரைவீரன் கோவிலை சேர்ந்த ராம்குமார்,20, கதிர்வேல்,22 ஆகியோரை கைது செய்தனர். மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது.


பைக் திருடியவர் கைது



நெகமம் அருகே, செங்குட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்,24. இவர், நேற்று முன்தினம் நெகமம் - பொள்ளாச்சி ரோட்டின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்குள்ள வணிக வளாகத்தில் பொருட்களை வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து, சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில், நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பொள்ளாச்சி மெயின் ரோட்டில், வெள்ளாளபாளையம் பிரிவு அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், கணக்கம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் என்பதும், சந்தோஷின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


அரசு பஸ் மோதி முதியவர் பலி



கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனி,90. இவர், பொள்ளாச்சி - கோவை ரோட்டோரம் உள்ள கடையில், டீ குடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு பஸ், முதியவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்



பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், எஸ்.ஐ., பரமேஸ்வரன் மற்றும் போலீசார், கோவை ஒத்தக்கால்மண்டபம் - வேலந்தாவளம் ரோடு தம்பாகவுண்டம்பாளையம் அருகே மறைவான இடத்தில், 50 கிலோ எடை கொண்ட, 21 மூட்டைகளில், 2,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மதுக்கரையை சேர்ந்த காசிமாயன்,42, பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவில் விற்பதற்காக கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X