ரயில்பாதை தொடர்பாக நில உரிமையாளர்களுடன் டி.ஆர்.ஓ., பேச்சு வார்த்தை

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில்பாதை வழித்தடத்தில் நிலத்தை ஒப்படைக்காமல் ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமையாளர்களுடன் டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 15 ஆண்டுகளுக்குமுன் துவங்கியது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளக்குறிச்சி மக்களின் கனவுத்திட்டமான ரயில் பாதை
 ரயில்பாதை தொடர்பாக நில உரிமையாளர்களுடன் டி.ஆர்.ஓ., பேச்சு வார்த்தை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில்பாதை வழித்தடத்தில் நிலத்தை ஒப்படைக்காமல் ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமையாளர்களுடன் டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 15 ஆண்டுகளுக்குமுன் துவங்கியது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளக்குறிச்சி மக்களின் கனவுத்திட்டமான ரயில் பாதை பணிகள் துவங்கி, வழித்தடம் கண்டறிதல், சென்ட்ரல் லைன் மார்க்கிங், ரயில் பாதை அமைப்பதற்கான பூமி பூஜை உள்ளிட்ட பணிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2018ல் மத்திய ரயில்வே துறை அமைச்சரால் இந்த திட்டத்திற்கான பூஜைகள் நடத்தி பூர்வாங்க பணிகள் துவங்கியது. மொத்தமுள்ள 17 கி.மீ., தொலைவிற்கான ரயில் பாதையின் வழித்தடங்களில் பெரும்பாலான நிலங்கள் வருவாய்த்துறை மூலம் அரசு மதிப்பீட்டின்படி தொகை வழங்கி, கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

ஆனால் 100க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் தங்களின் இடத்திற்கு வருவாய்த் துறையினர் நியமிக்கும் தொகையைஏற்கமுடியாது எனக்கூறி, நிலத்தை வழங்காமல் இருந்து வருகின்றனர்.

ஆட்சேபனை தெரிவிக்கும் நில உரிமையாளரிடம் விசாரணை செய்து, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில்நேற்று நடந்தது.

தாசில்தார் சத்தியநாராயணன், ரயில்வே தனி தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 120 நில உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். நில உரிமையாளர்கள் தங்களின் இடத்திற்கு அதிக விலை போகும் நிலையில் அரசு சார்பில் நிர்ணயிக்கப்படும் தொகை மிக குறைவாக உள்ளது. எனவே எங்களுக்கு போதிய தொகைவழங்கிட வேண்டும். எங்களின் நிலத்திற்கு இடையே ரயில் பாதை செல்லும் நிலையில் பாதையை கடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

அவர்களிடம் பேசிய டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், அரசு நிர்ணயிக்கும் தொகையில் ஆட்சேபனை உள்ளவர்கள்வழக்கு தொடர்ந்து கோர்ட் மூலம் உங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் வழிப்பாதைகேட்பவர்களின் ஒப்படைத்த நிலங்களில் பாதை ஏற்படுத்திட வேண்டும் என, நாங்கள் குறிப்பு ஏற்படுத்தியே நிலத்தை ஒப்படைப்போம். அந்தந்த இடங்களில் தென்னக ரயில்வே துறை சார்பில் வழி ஏற்படுத்தப்படும். எனவே ஆட்சேபனை தெரிவிக்காமல் நிலங்களை ஒப்படைத்து பணிகளை துவக்கிட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்' என்றார்.

இடம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்கி, நிலம் தென்னக ரயில்வேக்கு ஒப்படைத்தப்பின், ரயில் பாதைபணிகள் முழுவீச்சில் துவங்கிடும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வி.ஏ.ஓ., பழனிவேலு நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X