தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அதிருப்தி

Added : நவ 22, 2022 | |
Advertisement
ரோடு படுமோசம்ஆனைமலை, பெரியபோது ஊராட்சியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ரோடு, ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. ரோட்டை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆறுமுகம், பெரியபோது. புதர்சூழ்ந்த குடியிருப்புவால்பாறை நகரில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான
தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அதிருப்தி


ரோடு படுமோசம்



ஆனைமலை, பெரியபோது ஊராட்சியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ரோடு, ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. ரோட்டை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆறுமுகம், பெரியபோது.


புதர்சூழ்ந்த குடியிருப்பு



வால்பாறை நகரில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள், புதர்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் கூட, அதை குடியிருப்பு பகுதியில் தெரிந்து கொள்ள முடிவதில்லை. புதர் அகற்றி, குடியிருப்புகளை பராமரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சரசு, வால்பாறை.


வாகன நெரிசல்



பொள்ளாச்சி, மார்க்கெட் ரோட்டில், சிக்னல் இல்லாததால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. பாதசாரிகள் சாலையை கடக்கும்போது, விபத்தில் சிக்குகின்றனர். போக்குவரத்து போலீசார் கவனித்து, சிக்னல் அமைக்க முன்வர வேண்டும்.

- -- தீபிகா, பொள்ளாச்சி.


குறுகிய பாலத்தால் விபத்து



கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அருகே உள்ள பாலம், மிகவும் குறுகலாக உள்ளது. பாலத்தில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில், சரிவர எரியாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அரசு கவனித்து, பாலத்தை விரிவுபடுத்துவதுடன், மின் விளக்குகளையும் சீரமைக்க வேண்டும்.

-- -கவின் சங்கர், கோட்டூர்.


தெருவிளக்கு அமையுங்க!



ஆனைமலை, பெரிய போது டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் தெரு, மின் விளக்குகள் இன்றி, இரவு நேரங்களில் இருளில் மூழ்குகிறது. இந்த தெரு மட்டுமின்றி, ஊராட்சிக்குட்பட்ட சில முக்கிய தெருக்களிலும், மின் விளக்குகள் எரியாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

- -அர்ஜூன், பெரியபோது.


அடிப்படை வசதிகளில்லை



வால்பாறை, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பஸ் ஸ்டாண்டில், அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம், பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

- கருணாநிதி, வால்பாறை.


ஆற்றுப்பாலத்தில் சிக்கல்



பொள்ளாச்சி, மீன்கரை ரோடு, கேரளாவுக்கும், ஆனைமலைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த ரோட்டில், அம்பராம்பாளையம் ஆற்றுப்பாலத்தில், மின் விளக்குகள் இல்லை. இதனால், வாகன ஓட்டுனர்கள் இரவு நேரங்களில், விபத்துக்கு உள்ளாகின்றனர்.

- பாலகுரு, பொள்ளாச்சி.


சென்டர் மீடியனை கவனிங்க!



பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு விரிவுபடுத்தப்படுகிறது. புதிதாக அமைத்த சென்டர் மீடியனில், கான்கிரீட் தளம் அமைக்காததால், அதனுள் இறங்கும் மழை நீர் ரோட்டில் கசிந்து செல்கிறது. சென்டர் மீடியனில் தளம் அமைத்து, செடிகள் வளர்க்கும் இடத்தில் மட்டும் இடைவெளி விட வேண்டும்.

- மதன்குமார், நரசிங்காபுரம்.


குறுகலான ரோடு



பொள்ளாச்சி, பல்லடம் ரோடு - நியூஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதியில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ரோடு குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்களை திருப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது.

- கந்தசாமி, பொள்ளாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X